Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)

கன்னி: ஸ்ரீனிவாச பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். உறவினர்கள் ஆதரவை உண்டாக்குவார். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார்.

அஸ்தம்: ஆறாமிட சனி ராகு புதனால் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் தோன்றிய பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிரச்னை, போராட்டம் என்ற நிலை மாறும். வழக்கு சாதகமாகும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். 

சித்திரை 1, 2: செவ்வாய் பகவான் நீச்சமாக உள்ளதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை தேவை. பூர்வீகச்சொத்தில் முடிந்து போன விவகாரம் மீண்டும் தலை எடுக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us