Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் (30.1.2026 - 5.2.2026)

மகரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடம் விலகும்.

உத்திராடம் 2,3,4: ராசிக்குள் சூரியன் செவ்வாய் சஞ்சரிப்பதால் அவசர வேலைகளால் இயல்பு மாறும். வெளியூர் பயணம் ஏற்படும். ஒரு சிலருக்கு உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும். குடும்பத்தினருடன் இணக்கமற்ற நிலை ஏற்படும். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். செவ்வாய்க்கிழமை பொறுமை காப்பது நல்லது. 

திருவோணம்: அஷ்டம ஸ்தானத்தில் கேது, இரண்டாமிடத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை.  தொழிலில் பிறரை நம்புவதை முடிந்த வரை தவிர்க்கவும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போனாலும் நிம்மதி காப்பது நல்லது. புதன்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

அவிட்டம் 1,2: ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் பதட்டம் அதிகரிக்கும். பின் விளைவுகளை யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். உடல்நிலையிலும் மன நிலையிலும் பின்னடைவு ஏற்படும். எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 
சந்திராஷ்டமம்: 3.3.2026 அதிகாலை 12:33 மணி - 5.2.2026 காலை 7:01 மணி


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us