Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன்  (1.8.2025 - 7.8.2025)
துலாம்: விஷ்ணு துர்கையை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: விரய ஸ்தானத்தில் செவ்வாயால் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவு தோன்றும். புதிய முயற்சி இழுபறியாகும். லாப கேதுவால் நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர். வரவேண்டிய பணம் வரும்.

சுவாதி: ராகுவிற்கு குரு பார்வை கிடைப்பதால் உங்கள் நிலை உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பத்தாமிட சூரியன் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.

விசாகம் 1,2,3: பாக்கிய குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பணவரவை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்கும். குடும்ப நெருக்கடி நீங்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us