Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் (23.1.2026 - 29.1.2026)

துலாம்:சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்.

சித்திரை 3,4:சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். ஆரோக்யத்தில் பின்னடைவு ஏற்படும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை. வருமானத்தில் நேரடி கண்காணிப்புத்தேவை. செவ்வாய்க்கிழமை அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.

சுவாதி: கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்பம், தொழில், வேலையில் இருந்த போராட்ட நிலை மாறும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பெரியோரின் ஆதரவால் வேலை நடக்கும். புதன்கிழமை பொறுமையாக இருப்பது நல்லது.

விசாகம் 1,2,3: வக்கிர குருவால் வளம் கூடும். நலம் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தேவைக்கேற்ற வருமானம் வரும். புதன் வியாழனில் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்:27.1.2026 மதியம் 2:59 மணி - 29.1.2026 மாலை 5:18 மணி


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us