முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
மிதுனம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பதால் மனம் குழப்பம் அடையும். எடுக்கும் வேலை இழுபறியாகும். வியாபாரிகளுக்கு அரசு வழியில் நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலர் வம்பு வழக்கு என்று காவல் நிலையம் செல்லக்கூடிய நிலை ஏற்படும்.
திருவாதிரை: பாக்ய சனியும் ராகுவும் உங்கள் வேலைகளை வெற்றியாக்குவர். பணப்புழக்கத்தை அதிகரிப்பர். வெளிநாட்டு முயற்சியை சாதகமாக்குவர். புதிய சொத்து வாகனம் என்ற கனவை நனவாக்குவர். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

























