Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

முந்தய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
மிதுனம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.

மிருகசீரிடம் 3,4: எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.

திருவாதிரை: பெரியோர் ஆதரவால் நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய வகையில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.
வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். புதிய சொத்து வாகனம் என்று சேரும். வீட்டில் சுபிட்சமான நிலை இருக்கும். 

புனர்பூசம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்க அரசிடம் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 


Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow Us